சப்பாத்திக்கு மாற்றாக ராகி ரொட்டி: உடல் எடை குறையவும், எலும்புகள் வலுபெறவும் பெஸ்ட் சாய்ஸ்!
அரிசி மற்றும் கோதுமைக்கு மாற்றாகச் சிறுதானியங்களை நாடும் பலருக்கு ராகி ஒரு வரப்பிரசாதமாகும். குறிப்பாக கோடைக்காலத்தில் ராகி ரொட்டியை உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகளை மருத்துவர்கள் பட்டியலிடுகின்றனர்.
ராகி ரொட்டியின் 5 அதிரடி நன்மைகள்:
- உடல் சூடு தணியும்: ராகி இயற்கையிலேயே உடலைக் குளிர்ச்சியூட்டும் தன்மை கொண்டது. கோடையில் ஏற்படும் நீரிழப்பு மற்றும் உடல் சோர்வைத் தடுக்க இது உதவும்.
- எடை குறைப்பு (Weight Loss): இதில் அதிகப்படியான நார்ச்சத்து உள்ளதால், நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணவைத் தரும். இதனால் தேவையற்ற நொறுக்குத் தீனி உண்பது தவிர்க்கப்பட்டு உடல் எடை குறையும்.
- வலுவான எலும்புகள்: கால்சியம் சத்து செறிந்துள்ளதால், மாத்திரைகள் இன்றி எலும்புகளை இரும்பு போல வலுவாக்க ராகி உதவுகிறது. வளரும் குழந்தைகளுக்கு இது மிக அவசியம்.
- சர்க்கரை நோய் கட்டுப்பாடு: இதன் குறைந்த கிளைசீமிக் இன்டெக்ஸ் (Low GI) இரத்த சர்க்கரை அளவு சட்டென்று உயர்வதைத் தடுத்து, நீரிழிவு நோயாளிகளுக்குச் சிறந்த உணவாக அமைகிறது.
- எளிதான செரிமானம்: ராகி ஒரு லேசான உணவு என்பதால், செரிமான மண்டலத்திற்கு அதிக வேலை கொடுக்காமல் எளிதில் ஜீரணமாகும். கோடையில் ஏற்படும் வயிறு உப்பசம் போன்ற பிரச்சனைகளுக்கு இது நல்ல தீர்வாகும்.

