மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம், இந்தியாவில் பயன்பாட்டில் உள்ள E20 பெட்ரோல் குறித்த சந்தேகங்கள் மற்றும் தவறான தகவல்களுக்கு அறிவியல் பூர்வமான விளக்கங்களை அளித்துள்ளது.
❌ தவறான தகவல் vs ✅ உண்மை நிலவரம்
1️⃣ தவறான தகவல்: 2023-க்கு முன் உற்பத்தி செய்யப்பட்ட வாகனங்களில் E20 பெட்ரோலை பயன்படுத்த முடியாது.
- ✅ உண்மை: E15 பிளஸ் எரிபொருள் கடந்த 3.5 ஆண்டுகளுக்கும் மேலாகவும், E19-E20 எரிபொருள் 2.5 ஆண்டுகளுக்கும் மேலாகவும் பரவலாகப் பயன்பாட்டில் உள்ளது.
- இதுவரை எத்தனால் கலப்பால் என்ஜின் பழுது அல்லது வாகனக் கோளாறுகள் ஏற்பட்டதாக எந்தச் சான்றோ அல்லது அதிகாரப்பூர்வப் புகார்களோ பதிவாகவில்லை.
2️⃣ தவறான தகவல்: சுமார் 30 கோடி வாகனங்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும்.
- ✅ உண்மை: நாட்டில் தற்போது வரை:
- 🏍️ 20 கோடிக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள்
- 🚗 3 கோடிக்கும் மேற்பட்ட பெட்ரோல் கார்கள்எவ்விதப் பெரிய என்ஜின் பாதிப்புமின்றி E20 எரிபொருளில் தடையின்றி இயங்கி வருகின்றன.
3️⃣ தவறான தகவல்: பழைய வாகனங்களின் பாகங்கள் துருப்பிடித்துப் பாழாகிவிடும்.
- ✅ உண்மை: நாட்டின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனம் ஒன்று, FY 2025-26 ஆம் ஆண்டில் சேவை (Service) செய்த 2.84 கோடி வாகனங்களில், சுமார் 1.5 கோடி வாகனங்கள் E20 சான்றளிக்கப்படாத பழைய வாகனங்கள் ஆகும்.
- எனினும், அவற்றில் எத்தனால் பயன்பாட்டால் அசாதாரண அரிப்போ (Corrosion), என்ஜின் தேய்மானமோ அல்லது பாகங்களின் ஆயுள் குறைவதோ கண்டறியப்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
4️⃣ தவறான தகவல்: வாகனத்தின் மைலேஜ் (Mileage) பெருமளவு சரிந்துவிடும்.
- ✅ உண்மை: மைலேஜ் குறைவு என்பது ஓட்டுநர் பழக்கம், போக்குவரத்து நெரிசல், டயர் அழுத்தம், ஏசி பயன்பாடு மற்றும் வாகன பராமரிப்பைப் பொறுத்தது.
- E10-க்காக வடிவமைக்கப்பட்ட பழைய வாகனங்களில் E20 பயன்படுத்தும்போது மைலேஜில் ஏற்படும் மாற்றம் 3% முதல் 5% வரை மட்டுமே தவிர சமூக வலைதளங்களில் கூறப்படுவது போல் பெரிய இழப்பு இல்லை.
🌟 E20 பெட்ரோலின் கூடுதல் நன்மைகள்:
- 🚀 உயர்ந்த ஆக்டேன் அளவு (Higher Octane Rating): சிறந்த ஆன்டி-நாக் பண்புகளுடன் என்ஜின் செயல்பாட்டை மென்மையாக்குகிறது.
- 🌿 தூய்மையான எரிதல்: என்ஜினின் முடுக்கம் (Acceleration) மற்றும் பயணத் தரத்தை மேம்படுத்துவதோடு சுற்றச்சூழல் மாசுபாட்டைக் குறைக்கிறது.

