திருவனந்தபுரம்: மத்திய விசாரணை அமைப்புகளின் செயல்பாடுகள் மற்றும் அரசியல் தலைவர்கள் மீதான சோதனைகள் குறித்துப் பல்வேறு விவாதங்கள் எழுந்து வரும் நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மற்றும் அமலாக்கத்துறை (ED) நடவடிக்கை குறித்துக் கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ள கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசு எதிர்க்கட்சிகளை நசுக்கப் பார்க்கிறது என்ற குற்றச்சாட்டை முன்வைத்து, அமலாக்கத்துறை சோதனைகள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது பினராயி விஜயன் தனது பதிலை அளித்தார்.
பினராயி விஜயன் பேசியதாவது:
“திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி போன்ற எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் மீது அமலாக்கத்துறை (ED) நடவடிக்கை எடுக்கும்போது, அதனை வரவேற்றுப் பேசியவர் ராகுல் காந்தி. பிற மாநிலங்களில் எதிர்க்கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சிதான் முதலில் குரல் கொடுத்தது.
அப்படி இருக்கும்போது, இப்போது அதே அமலாக்கத்துறை நடத்தும் சோதனைகள் ராகுல் காந்திக்கு நிச்சயம் பெரும் மனநிறைவையும் மகிழ்ச்சியையும் தான் அளிக்கும்.”
இவ்வாறு பினராயி விஜயன் காரசாரமாகத் தெரிவித்துள்ளார்.
பாஜகவுக்கு எதிரான தேசியக் கூட்டணியில் காங்கிரஸும், இடதுசாரி கட்சிகளும் இணைந்து செயல்பட்டாலும், கேரள மாநில அளவில் இரு கட்சிகளுக்கும் இடையே நிலவி வரும் அரசியல் மோதல் மற்றும் முரண்பாடுகள் முன்னாள் முதல்வர் பினராயி விஜயனின் இந்த விமர்சனத்தின் மூலம் மீண்டும் வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக அரசியல் விமரிசகர்கள் கருதுகின்றனர்.
முன்னாள் முதல்வர்

