சாம்பார் முதல் தயிர் சாதம் வரை: கண் ஆரோக்கியத்திற்கான தென்னிந்திய உணவு ரகசியங்கள்!
நமது பாரம்பரிய உணவுகளிலேயே கண்களுக்குத் தேவையான லுடீன், வைட்டமின் ஏ மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளன என்கிறார் பிரபல கண் மருத்துவர் பகிர்ந்துள்ள சில ‘சூப்பர் காம்பினேஷன்கள்’ இதோ:
டாக்டரின் டாப்-7 உணவுப் பரிந்துரைகள்:
| உணவு வகை | எதைச் சேர்க்க வேண்டும்? | நன்மை |
| 1. சாம்பார் சாதம் | முருங்கைக்கீரை பொரியல் | விழித்திரையை (Retina) நீல ஒளியிலிருந்து பாதுகாக்கும். |
| 2. பிரியாணி | கேரட் பச்சடி | வைட்டமின் ஏ மூலம் கண் பார்வையைத் தெளிவாக்கும். |
| 3. தயிர் சாதம் | மாதுளை / வெள்ளரிக்காய் | கண்களில் ஏற்படும் அழற்சி (Inflammation) மற்றும் சோர்வைக் குறைக்கும். |
| 4. எலுமிச்சை சாதம் | வேர்க்கடலை | இதிலுள்ள வைட்டமின் ஈ கண் செல்களைப் பாதுகாக்கும். |
| 5. தக்காளி சாதம் | பசலைக்கீரை கடைசல் | மொபைல் போன் திரையிலிருந்து வரும் நீல ஒளியின் பாதிப்பைத் தடுக்கும். |
| 6. இட்லி சாம்பார் | நெய் மற்றும் காய்கறிகள் | வைட்டமின் ஏ சத்தை உடல் எளிதில் உறிஞ்ச உதவும். |
| 7. தோசை | புதினா / தேங்காய் சட்னி | ஆரோக்கியமான கொழுப்புகள் கண்ணின் மேற்பரப்பை ஈரப்பதத்துடன் வைக்கும். |
மருத்துவரின் கூடுதல் அறிவுரை:
“உணவில் கவனம் செலுத்துவதோடு, மொபைல் உபயோகத்தைக் குறைத்து கண்களுக்குப் போதுமான ஓய்வு அளிப்பது அவசியம். 20-20-20 விதியைப் பின்பற்றுங்கள் (ஒவ்வொரு 20 நிமிடத்திற்கும், 20 அடி தூரத்தில் உள்ள பொருளை 20 வினாடிகள் பாருங்கள்).

