சென்னை: இன்று பராபவ வருடம், வைகாசி மாதம் 08-ஆம் தேதி (22 மே 2026), வெள்ளிக்கிழமை. இன்றைய தினம் பூசம் மற்றும் ஆயில்யம் நட்சத்திரம், சஷ்டி மற்றும் சப்தமி திதி கூடி வருகிறது. இன்று தனுசு ராசிக்கு (மூலம், பூராடம் நட்சத்திரங்கள்) சந்திராஷ்டமம் உள்ளதால் எச்சரிக்கை தேவை. சுக்கிரனின் அருள் நிறைந்த இன்றைய நாளில் 12 ராசிகளுக்கான துல்லியமான பலன்கள் இதோ:
மேஷம்
இன்று உங்களுக்கு மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். குடும்பத்தில் நீண்ட நாட்களாக இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி அமைதி திரும்பும். வெளிநாடு செல்ல விசா முயல்பவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்களைக் கவர புதிய உத்திகளைக் கையாள்வீர்கள். அலுவலகத்தில் சக ஊழியர்களைப் பகைத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது.
ரிஷபம்
குடும்பத்தில் சுபகாரியங்கள், குறிப்பாக திருமண முயற்சிகள் கைகூடி வரும். வெளியூர் பயணங்களால் மன மகிழ்ச்சியும், வெளிவட்டாரத்தில் மதிப்பும் அந்தஸ்தும் உயரும். சொந்த வீட்டை விரிவுபடுத்தும் எண்ணம் நிறைவேறும். வியாபாரம் லாபகரமாக இருக்கும். அலுவலகத்தில் தேவையற்ற பேச்சுகளைத் தவிர்த்து, “தான் உண்டு தன் வேலை உண்டு” என்று இருப்பது வீண் சிக்கல்களைத் தவிர்க்கும்.
மிதுனம்
நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற துடிப்புடன் செயல்படுவீர்கள். தாயார் மற்றும் மனைவியின் உடல்நிலை சீராகும். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உங்களுக்குப் பக்கபலமாக இருப்பார்கள். பிள்ளைகளால் குடும்பத்திற்குப் பெருமை சேரும். வியாபாரம் மற்றும் உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றமும், எதிர்பார்த்த லாபமும் கிடைக்கும் நாளாக அமையும்.
கடகம்
இன்று எந்தவொரு காரியத்திலும் கொஞ்சம் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. பிள்ளைகளிடம் முன்கோபத்தைக் காட்ட வேண்டாம். காரியங்களில் சிறு தடைகள் வரலாம் என்பதால் பொறுமை தேவை. அலுவலகத்தில் மற்றவர்களைப் பற்றி மேலதிகாரியிடம் புகார் கூறுவதைத் தவிர்க்கவும். வியாபாரத்தில் நிதானம் தேவை, பணியாளர்களால் சில அலைச்சல்கள் ஏற்படலாம்.
சிம்மம்
பிரபலங்கள் அல்லது முக்கிய மனிதர்களின் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்ளும் அளவிற்கு நெருக்கம் அதிகரிக்கும். ஆன்மிகக் காரியங்களில் நாட்டம் கூடும். தொழிலில் உங்களுக்கு எதிராகச் செயல்பட்ட பணியாளர்களை மாற்றி அமைப்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் இணக்கமாகச் செயல்பட்டு காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள்.
கன்னி
நீண்ட நாட்களாக உங்களை வாட்டி வதைத்த கடன் பிரச்சினைகளிலிருந்து விடுபட புதிய மாற்றுவழிகள் புலப்படும். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். முகப்பொலிவும் சுறுசுறுப்பும் கூடும். வியாபாரத்தைப் பெரிய அளவில் விரிவுபடுத்தும் முயற்சிகளில் இறங்குவீர்கள். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் முழு ஆதரவும் பாராட்டும் உங்களுக்குக் கிடைக்கும்.
துலாம்
உங்களின் வெளிப்படையான பேச்சால் நீண்ட நாட்களாகத் தள்ளிப்போன சில முக்கிய காரியங்களை இன்று முடித்துக் காட்டுவீர்கள். கணவன்-மனைவிக்குள் இருந்த ஈகோ பிரச்சினைகள் தீர்ந்து நெருக்கம் அதிகமாகும். அலுவலகத்தில் மேலதிகாரிகள் உங்கள் உழைப்பைப் பாராட்டுவார்கள். வியாபார ரீதியான பயணங்கள் ஓரளவு நல்ல லாபத்தைத் தரும்.
விருச்சிகம்
மனதிற்கு இதமான நல்ல செய்திகள் வந்து சேரும். உடல் சோர்வு நீங்கி ஆரோக்கியம் சீராகும். பூர்வீக சொத்துக்களைச் சீரமைக்கும் பணிகளைத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் நீண்ட நாட்களாக வராமல் இருந்த பழைய பாக்கிகள் வசூலாகும். பணியாளர்கள் ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகத்தில் சக மனிதர்களிடம் வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும்.
தனுசு (சந்திராஷ்டமம்)
இன்று குடும்பத்தில் உங்கள் கை ஓங்கினாலும், சந்திராஷ்டமம் தினம் என்பதால் எதிலும் கூடுதல் எச்சரிக்கை தேவை. ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துச் சேமிக்கத் தொடங்குவது நல்லது. வியாபாரத்தை விரிவுபடுத்த முக்கிய நபர்களைச் சந்திப்பீர்கள். புதிய முதலீடுகள் மற்றும் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. கோபத்தைக் குறைத்துக் கொண்டு நிதானமாகச் செயல்படவும்.
மகரம்
பூர்வீக சொத்து சம்பந்தமான வழக்குகள் சற்று இழுபறியாக வாய்ப்புள்ளது. பணப் பரிவர்த்தனைகளில் மிகவும் கவனமாக இருக்கவும். கணவன்-மனைவிக்குள் தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்த்து விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. அலுவலக ரீதியான பயணங்கள் மேற்கொள்ள நேரிடலாம். வியாபாரத்தில் போட்டிகளைச் சமாளித்து முன்னேறுவீர்கள்.
கும்ப்ம்
இன்று உங்களுக்குக் காரிய வெற்றி உண்டாகும் நாளாகும். வெளிவட்டாரத்தில் உங்களின் மதிப்பு, மரியாதை கூடும். குடும்பத்தில் சுபகாரியங்கள் ஏற்பாடாகும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் சரியான நேரத்தில் கிடைக்கும். உத்தியோகத்தில் முக்கியப் பிரமுகர்களைச் சந்திப்பதன் மூலம் புதிய பொறுப்புகளும் பதவிகளும் கிடைக்க வாய்ப்புள்ளது.
மீனம்
இன்று வீட்டிற்குத் தேவையான புதிய எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களை வாங்குவீர்கள். மனைவி வழியில் எதிர்பார்த்த பண உதவி தடையின்றித் தாராளமாகக் கிடைக்கும். வாகனப் பழுதுகள் நீங்கும். வியாபார ரீதியாகப் பெரிய மனிதர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிட்டும். அலுவலகத்தில் மற்றவர்களைப் பற்றிப் புறம் பேசுவதைத் தவிர்ப்பது உங்கள் நற்பெயரைக் காக்கும்.

