மே 1-ல் வைகை ஆற்றில் இறங்குகிறார் அழகர் – 490 மண்டகப்படிகளில் எழுந்தருளும் வைபவம்!
லட்சக்கணக்கான பக்தர்கள் ஆவலுடன் காத்திருக்கும் கள்ளழகர் திருவிழா இன்று (ஏப்ரல் 27) அழகர்கோவிலில் முறைப்படி தொடங்குகிறது. அடுத்த பத்து நாட்களுக்கு மதுரையே ‘கோவிந்தா’ கோஷத்தில் அதிரப்போகிறது.
கள்ளழகர் திருவிழா: முக்கிய நாட்களும் நிகழ்வுகளும் (2026)
- ஏப்ரல் 27 (இன்று): அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள் சன்னதியில் சிறப்பு பூஜைகளுடன் விழா தொடக்கம்.
- ஏப்ரல் 28 & 29: தீவட்டி பரிவாரங்களுடன் திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளல்.
- ஏப்ரல் 29 (மாலை 6.15): கண்டாங்கி பட்டு உடுத்தி, நேர்கம்பு ஏந்தி அழகர் மலையிலிருந்து மதுரைக்குப் புறப்படுதல். பதினெட்டாம் படி கருப்பணசாமியிடம் உத்தரவு பெறுதல்.
- ஏப்ரல் 30 (காலை 6.30): மதுரை மூன்று மாவடியில் ‘எதிர்சேவை’ – மதுரை மக்கள் அழகரை வரவேற்கும் உற்சாக நிகழ்வு.
- ஏப்ரல் 30 (இரவு): தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் திருமஞ்சனம். ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை அழகருக்கு அணிவிக்கப்படுதல்.
சிகர நிகழ்ச்சி: வைகை ஆற்றில் இறங்குதல்
- மே 1 (வெள்ளிக்கிழமை):
- அதிகாலை 3.00: ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளல்.
- அதிகாலை 5.35 – 5.55: தங்கக் குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்குதல்.
- பிற்பகல்: ராமராயர் மண்டபத்தில் தீர்த்தவாரி.
- இரவு: வண்டியூர் வீரராகவ பெருமாள் கோவிலில் தங்குதல்.
தொடர் நிகழ்வுகள்:
- மே 2 (காலை): வண்டியூர் தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளி, மண்டூக முனிவருக்குச் சாபம் தீர்த்தல்.
- மே 2 (இரவு 10.00): ராமராயர் மண்டபத்தில் விடிய விடிய நடைபெறும் தசாவதார நிகழ்ச்சி.
- மே 3: அனந்தராயர் பல்லக்கில் புறப்பாடு.
- மே 4: அதிகாலை பூப்பல்லக்கில் அழகர் மலைக்குத் திரும்புதல்.
- மே 5: அழகர் இருப்பிடம் (அழகர்கோவில்) சேருதல்.

