“டயப்பர் போட்ட காலத்தில் எம்.எல்.ஏ ஆனவர் இபிஎஸ்” – உதயநிதிக்கு அண்ணாமலை பதிலடி!
சேலம் தெற்கு தொகுதி அதிமுக வேட்பாளர் வினோத் மற்றும் சேலம் வடக்கு தொகுதி பாமக வேட்பாளர் சதாசிவம் ஆகியோரை ஆதரித்துப் பிரச்சாரம் செய்த பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, திமுக அரசு மற்றும் உதயநிதி ஸ்டாலின் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
பிரச்சாரத்தின் அதிரடி பாயிண்டுகள்:
- மோடியின் கட்டளை: “எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதல்வராக்க பாஜகவினர் அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் எனப் பிரதமர் மோடி கட்டளையிட்டுள்ளார். அடுத்த 10 நாட்கள் பாஜகவினர் கண் துஞ்சாது களப்பணியாற்ற வேண்டும்” என உற்சாகப்படுத்தினார்.
- உதயநிதிக்கு விமர்சனம்: “உதயநிதி ஸ்டாலின் டயப்பர் போட்டுக் கொண்டிருந்த காலத்திலேயே எம்.எல்.ஏ-வாக இருந்தவர் எடப்பாடியார். உதயநிதி ஒரு தற்குறியாக இருக்கிறார், தனது சாதனைகளைச் சொல்லாமல் ஆபாசமாகப் பேசுகிறார்” எனச் சாடினார்.
- திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு: கடந்த 5 ஆண்டுகளில் 2,080 பாலியல் வன்கொடுமைகள், 8,000-க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்துள்ளதாகவும், கஞ்சா புழக்கத்தைத் திமுக-வால் ஒழிக்க முடியாது என்றும் குற்றம் சாட்டினார். இபிஎஸ் முதல்வரான 100 நாட்களில் கஞ்சா ஒழிக்கப்படும் என உறுதியளித்தார்.
- விவசாயத் திட்டங்கள்: ‘நடந்தாய் வாழி காவிரி’ உட்பட இபிஎஸ் கொண்டு வந்த விவசாயத் திட்டங்களைத் திமுக முடக்கிவிட்டதாகக் கூறிய அவர், விவசாயம் தெரிந்த ஒருவர் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்றார்.
- நிர்வாகச் சீர்கேடு: தேர்தல் ஆணையம் டிஜிபியை மாற்றவில்லை, 8 மாதங்களாகப் பொறுப்பு அதிகாரியை வைத்திருந்த திமுக-வுக்குப் பதிலாக நிரந்தர டிஜிபியை நியமித்துள்ளது எனத் தெளிவுபடுத்தினார்.
இறுதி முழக்கம்:
“சேலத்தின் 11 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணியை வெற்றி பெறச் செய்து, ஆட்சிக்கான சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க வேண்டும்” என அண்ணாமலை வேண்டுகோள் விடுத்தார்.

