சென்னை:
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான சூர்யா நடிப்பில் வெளியாகி, ரசிகர்களிடையே மற்றும் விமர்சகர்களிடையே ஏகோபித்த வரவேற்பைப் பெற்று வரும் திரைப்படம் ‘666 . கருப்பு’. இத்திரைப்படத்தின் அசுரத்தனமான வெற்றி மற்றும் அதில் சூர்யாவின் மிரட்டலான நடிப்பு குறித்து, அவரது மனைவியும் பிரபல நடிகையுமான ஜோதிகா அண்மைய பேட்டி ஒன்றில் மிகுந்த மகிழ்ச்சியுடனும் நெகிழ்ச்சியுடனும் பேசியுள்ளார்.
“படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் சூர்யா காட்டிய அர்ப்பணிப்பு ஒட்டுமொத்தப் படத்தையும் வேறொரு தளத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது” என அவர் பாராட்டியுள்ளார்.
மிரள வைத்த கடைசி 10 நிமிடங்கள்:
இத்திரைப்படத்தில் சூர்யாவின் நடிப்பு மற்றும் ரசிகர்களின் கொண்டாட்டம் குறித்து நடிகை ஜோதிகா தனது பேட்டியில் பகிர்ந்து கொண்டதாவது:
“‘666 . கருப்பு’ திரைப்படத்தின் கடைசி 10 நிமிடங்கள் சூர்யா உண்மையிலேயே மிக பிரமாதமாக, தன் அசாத்திய நடிப்புத் திறனை வெளிப்படுத்தியிருந்தார். அந்த க்ளைமாக்ஸ் காட்சியைத் தியேட்டரில் பார்த்த போது எனக்கே சிலிர்த்துவிட்டது. ஒரு நடிகராக அவர் அந்த கதாபாத்திரத்திற்காக எடுத்த உழைப்புக்குக் கிடைத்துள்ள அங்கீகாரம் இது.”
“வீட்டில் ஒரே கொண்டாட்டம்!”
தொடர்ந்து படத்தின் மெகா ஹிட் வெற்றி குறித்துப் பேசிய அவர், “திரையரங்குகளில் ரசிகர்களிடம் இருந்து எங்களுக்குக் கிடைக்கும் இந்த எல்லையற்ற அன்பைப் பார்த்து நாங்கள் மிகவும் நெகிழ்ந்து போயிருக்கிறோம்; அதே சமயம் அளவற்ற மகிழ்ச்சியாகவும் இருக்கிறோம். படம் வெளியானது முதல் தியேட்டர்களில் ரெஸ்பான்ஸ் பாசிட்டிவாக வந்து கொண்டிருப்பதால், உண்மையில் தற்போது எங்கள் வீட்டில் ஒரே கொண்டாட்டமாக இருக்கிறது” என்று ஜோதிகா மகிழ்ச்சி ததும்பக் குறிப்பிட்டுள்ளார்.
அண்மைக்காலமாகத் வித்தியாசமான கதைக் களங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் சூர்யாவுக்கு, ‘666 . கருப்பு’ திரைப்படம் அவரது திரைப்பயணத்தில் மிக முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படும் வேளையில், ஜோதிகாவின் இந்த நெகிழ்ச்சியான பேட்டி சமூக வலைதளங்களில் சூர்யா ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.

