இஸ்லாமியர்களின் புனிதத் திருநாளான ரமலான் மாதத்தை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற உள்ளது. கட்சித் தலைவர் கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சி மாமல்லபுரத்தில் உள்ள Four Points by Sheraton ஹோட்டலில் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும் என தலைமை நிலையச் செயலகம் அறிவித்துள்ளது.
தேர்தல் ஆணையத்தின் முறையான அனுமதி பெற்று இந்த நிகழ்ச்சி உள்ளரங்கமாக நடைபெறுகிறது. இதில் அதிகபட்சம் 1000 பேர் மட்டுமே கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக

