மத்திய கிழக்கு பகுதியில் நிலவும் பதற்றநிலைக்கிடையே, அமெரிக்காவுக்கு எதிராக ஈரான் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது. ஈரானின் புதிய உச்சத் தலைவராக கருதப்படும் மொஜ்தபா கமேனி, போரில் ஈரான் ஒருபோதும் பின்வாங்காது என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “போரில் ஈரான் எந்த சூழ்நிலையிலும் பின்வாங்காது. அயத்துல்லா கமேனிக்காக மட்டுமின்றி, போரில் உயிர்நீத்த ஒவ்வொரு வீரருக்காகவும் அமெரிக்காவை பழிவாங்குவோம்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், உலகில் அமைதியை நிலைநாட்டுவதாக அமெரிக்கா கூறுவது உண்மையல்ல என்றும், அந்தக் கூற்று முற்றிலும் பொய்யானது என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். மத்திய கிழக்கில் நடைபெறும் நடவடிக்கைகள் அமெரிக்காவின் அரசியல் நோக்கங்களுக்காகவே நடைபெறுகின்றன என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த கருத்துகள் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் வகையில் இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான உறவுகள் ஏற்கனவே பதற்றமாக உள்ள நிலையில், மொஜ்தபா கமேனியின் இந்த எச்சரிக்கை சர்வதேச அளவில் கவனம் ஈர்த்துள்ளது

