இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தமிழ்நாட்டின் இறுதி வாக்காளர் பட்டியலின்படி, மாநிலத்தில் மொத்தம் 5,67,07,380 பேர் வாக்காளர்களாக பதிவாகியுள்ளனர்.
பாலின அடிப்படையிலான விவரம்:
- ஆண் வாக்காளர்கள் – 2,77,38,925
- பெண் வாக்காளர்கள் – 2,89,60,838
- மூன்றாம் பாலினம் – 7,617
பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை ஆண்களை விட அதிகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டு இந்த இறுதி பட்டியல் முக்கிய கட்டமாக பார்க்கப்படுகிறது. வாக்காளர்கள் தங்களின் பெயர்கள் சரிபார்க்க தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

