- சர்வதேச தரவரிசை: 2025-ஆம் ஆண்டில் இந்தியாவின் அண்டை நாடுகள் மற்றும் ஆசியப் பிராந்தியத்தில் புகையிலை பயன்படுத்திய மக்களின் விகிதத்தில் மியான்மர் (42.5%) முதலிடத்திலும், இந்தியா (21.9%) 6-வது இடத்திலும் உள்ளது.
- பாலின வாரியான புள்ளிவிவரம்: இந்தியாவில் ஆண்களில் 10 பேரில் சுமார் 4 பேர் புகையிலை பொருட்களைப் பயன்படுத்துகின்றனர்; பெண்களில் 100 பேரில் சுமார் 4 பேர் புகையிலையைப் பயன்படுத்துகின்றனர்.
- வயது வாரியான விவரம்: 30 மற்றும் 40 வயதுகளில் உள்ள ஆண்களிடையே புகையிலை பயன்பாடு அதிகமாகக் காணப்படுகிறது; அதேபோல், 50 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பெண்களில் சுமார் 17% பேர் புகையிலை பயன்படுத்துகின்றனர்.
#TobaccoUsage #HealthUpdate #DataForIndia #PublicHealth #TobaccoFree #Statistics #SocialAwareness

