காவிரி விவகாரம் மற்றும் அரசியல் கூட்டங்களில் தான் பேசியது தொடர்பாகக் காவல்துறையினர் தன்னைக் கைது செய்யும் நடவடிக்கைகள் குறித்துப் பேசியுள்ள உதயநிதி ஸ்டாலின், “என் மீதான கைது நடவடிக்கையை காமெடியாகப் பார்க்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், தான் பேசாத கருத்துகளைத் திரித்துச் சமூக வலைதளங்களில் பரப்புவதாகவும், எதவாது அரசியல் சிக்கல்கள் அல்லது பிரச்சினைகள் ஏற்படும்போது அதைத் திசைதிருப்பவே இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

