சென்னை: 2026–27ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தபோது, ஆட்சேபனையற்ற அரசு புறம்போக்கு நிலங்களில் வசித்து வரும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு மகிழ்ச்சி தரும் அறிவிப்பை நிதியமைச்சர் வெளியிட்டார்.
கடந்த 5 ஆண்டுகளில், ஆட்சேபனையற்ற அரசு நிலங்களில் வசிக்கும் 77,800 பேருக்கு ஒருமுறை சிறப்பு வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் இணையவழி வீட்டு மனை பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும், தகுதியானவர்களுக்கு தொடர்ந்து பட்டா வழங்கப்படும் என்றும் உறுதி அளிக்கப்பட்டது.
கல்வி & கட்டமைப்பு வளர்ச்சி
- பள்ளிக் கல்வித் துறைக்கு – ₹48,534 கோடி
- நெல்லை, கோவை, திருச்சி நகரங்களில் – ₹902 கோடியில் நவீன நூலகங்கள்
- வடசென்னை வளர்ச்சி திட்டம் – ₹6,048 கோடி (பேருந்து நிலையம், பூங்கா, உடற்பயிற்சி மையம், தொழில்நுட்ப கல்லூரி உள்ளிட்டவை
மருத்துவம் & நலத்திட்டங்கள்
- மருத்துவத் துறைக்கு – ₹22,090 கோடி
- “இன்னுயிர் காப்போம்” திட்டம் மூலம் 5.11 லட்சம் பேரின் உயிர் காப்பாற்றப்பட்டது (₹413 கோடி செலவில்)
- “நலன் காக்கும் முகாம்” மூலம் 17 லட்சம் பேர் பயன்
- மகப்பேறு மற்றும் சிசு இறப்பு விகிதம் – தேசிய சராசரியை விட குறைவாக உள்ளது
- பாதுகாப்பான பிரசவத்தில் இந்தியாவில் தமிழகம் முன்னிலையில்
வீடுகள் & மறுவாழ்வு
- தமிழகத்தில் 10,649 புதிய வீடுகள் கட்டப்படும்
- இலங்கை தமிழர்களுக்கான மறுவாழ்வு திட்டம் – ₹630 கோடி
- 10,469 வீடுகள் திட்டம்
- 6,010 வீடுகள் முடிக்கப்பட்டது; மீதமுள்ளவை பணியில்
மகளிர் முன்னேற்றம் – பல முன்னோடி திட்டங்கள்
- மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ₹1.40 லட்சம் கோடி கடன்
- 19 “தோழி” விடுதிகள் அமைப்பு
- மகளிர் உரிமை தொகை முன்கூட்டியே வழங்கப்பட்டது; திட்டம் தொடரும்
- விடியல் பேருந்து திட்டத்தில் 880 கோடிக்கும் மேற்பட்ட முறை பயணம்
கலாச்சாரம் & பாரம்பரியம்
- ₹285 கோடியில் புதிய அருங்காட்சியகங்கள்
- சோழர், நொய்யல், வெண்கல மற்றும் தமிழர் பண்பாட்டு அருங்காட்சியகங்கள்
- கீழடி & பொருநை உலகத் தர அருங்காட்சியகங்கள் சிறப்பான வரவேற்பு
தமிழ்நாடு நாட்டின் இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாக முன்னேறி வருவதாகவும், இரட்டை இலக்கு பொருளாதார வளர்ச்சியை அடைய பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் பட்ஜெட் உரையில் வலியுறுத்தப்பட்டது.
மக்கள் நலன், மகளிர் முன்னேற்றம், வீட்டு உரிமை மற்றும் சமூக பாதுகாப்பு ஆகியவற்றை மையமாகக் கொண்டு இந்த இடைக்கால பட்ஜெட் வடிவமைக்கப்பட்டுள்ளது.

