மும்பை:

பான்-இந்திய திரைப்படமான ‘கே.ஜி.எஃப்’ மூலம் உலகளவில் கவனம் ஈர்த்த கன்னட நடிகர் யஷ், பாலிவுட்டில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘ராமாயணா’ திரைப்படம் குறித்த முக்கியத் தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

உலகளாவிய தரம்

இயக்குனர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் இந்திய புராணக் காவியமான ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் இத்திரைப்படத்தை, நமித் மல்ஹோத்ரா மற்றும் நடிகர் யஷ் இணைந்து தயாரிக்கின்றனர்.

இப்படம் குறித்துப் பேசிய நடிகர் யஷ், “ராமாயணம் என்பது நமது கலாச்சாரத்தின் அடையாளம். நம் இந்திய மண்ணின் மிகச்சிறந்த இதிகாசக் கதையை, சர்வதேச தொழில்நுட்பத் தரத்தோடு உலக அரங்கில் மிக பிரம்மாண்டமாக வைக்கப் போகிறோம்” என்று பெருமிதத்துடன் தெரிவித்தார்.

இராவணன் கதாபாத்திரத்தில் யஷ்?

இத்திரைப்படத்தில் ஸ்ரீ ராமராக ரன்பீர் கபூரும், சீதையாக சாய் பல்லவியும் நடித்து வருகின்றனர். மேலும், இப்படத்தில் ‘இராவணன்’ என்ற சக்திவாய்ந்த கதாபாத்திரத்தில் நடிகர் யஷ் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலரும் இணைந்து நடிக்கும் ‘ராமாயணா’ திரைப்படம், இரண்டு பாகங்களாக உருவாகி உலக அளவில் பல்வேறு மொழிகளில் வெளியாகவுள்ளது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version