கோவை மாவட்டம் ஆலாந்துறையில் உள்ள சௌடேஸ்வரி ஹாலில் ஸ்கை குளோபல் ஃபவுண்டேஷன் மற்றும் தொழிலாளர் சங்கமான AITUC இணைந்து தொழிலாளர் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு ஸ்கை குளோபல் ஃபவுண்டேஷன் நிறுவனர் சதீஷ் தங்கப்பன் முன்னிலை வகித்தார். அமைப்பின் தலைவர் புவனாம்பாள் சுப்பிரமணியம் மற்றும் கோயமுத்தூர் லேபர் யூனியன் பொதுச் செயலாளர் ஆர். பாலகிருஷ்ணன் ஆகியோர் தலைமையேற்றனர்.

அறங்காவலர் அறிவொளி வரவேற்புரையாற்ற, அறங்காவலர் சீனிவாசன் வாழ்த்துரை வழங்கினார்.

சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்பு

இந்த நிகழ்ச்சியில் நியூயார்க் நகரத்தை சேர்ந்த ஜெசிக்கா மில்லிங்கன், தமிழ்நாடு AITUC கட்டிடத் தொழிலாளர் சங்க மாநில பொதுச் செயலாளர் என். செல்வராஜ், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் சு. பழனிசாமி, சட்ட களஞ்சியம் ஆசிரியர் குறுங்கை டி. கலைமணி உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

தொழிலாளர் உரிமைகள் குறித்து விழிப்புணர்வு

AITUC மாநில பொதுச் செயலாளர் என். செல்வராஜ் தனது உரையில் அமைப்பு சாராத தொழிலாளர்களுக்கான சட்டங்கள் மற்றும் அரசு வழங்கும் நலத்திட்டங்கள் குறித்து விளக்கினார்.

ஸ்கை குளோபல் ஃபவுண்டேஷன் தலைவர் சதீஷ் தங்கப்பன், பெண்கள் மற்றும் மாணவிகளுக்கு சுயதொழில் மற்றும் கணினி பயிற்சி வழங்கப்பட்டு வருவதாகவும், கிராமப்புற தொழிலாளர்களுக்கு மருத்துவ உதவிகள் வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

ஜெசிக்கா மில்லிங்கன் தனது உரையில் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் சவால்களை எடுத்துரைத்து, பெண்கள் தைரியமாக சமூகத்தில் முன்னேற வேண்டும் என்று வலியுறுத்தினார்.

நல்லகண்ணுவுக்கு மலரஞ்சலி

நிகழ்ச்சிக்கு முன்பாக மறைந்த விடுதலைப் போராட்ட வீரரும் தகைசால் தமிழருமான ஆர். நல்லகண்ணு அவர்களுக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

200க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்பு

இந்த விழிப்புணர்வு முகாமில் 200க்கும் மேற்பட்ட உழைக்கும் பெண்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி முடிவில் கலந்து கொண்ட தொழிலாளர்களுக்கு பரிசுப் பொருட்களும் மதிய உணவும் வழங்கப்பட்டது.

Share.
Leave A Reply

Exit mobile version