• மகளிர் விவசாயிகள் தின விழா: சர்வதேச பெண் விவசாயிகள் ஆண்டின் ஒரு பகுதியாக, மகளிர் விவசாயிகளின் சிறப்பான பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் சென்னை வேளாண்மை இயக்குநரகத்தில் மகளிர் விவசாயிகள் தின விழா நடைபெற்றது.
  • தலைமை: மாண்புமிகு வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் திரு. ர. வினோத் அவர்கள் தலைமையில் இந்நிகழ்வு நடத்தப்பட்டது.
  • சிறப்புப் பங்கேற்பு: விழாவில் ஏராளமான பெண் விவசாயிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். உணவு சமைப்பவள் மட்டுமல்ல, அதனை உருவாக்கும் மூலமும் பெண்ணே என்பதைப் போற்றும் வகையில் இவ்விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

நாட்டின் முதுகெலும்பான விவசாயத்தில் பெண்களின் உழைப்பையும் பங்களிப்பையும் அங்கீகரித்துச் கவுரவிக்கும் நமது அரசின் மற்றுமொரு பெருமைமிகு முன்னெடுப்பு இது! 🌾✨

#WomenFarmers #AgricultureDepartment #TNGovernment #MinisterRVinoth #WomenPower #TamilNaduUpdates

Share.
Leave A Reply

Exit mobile version