கெட்ட நீரை வெளியேற்றி தசைகளை இரும்பு போல் வலுவாக்கும் அற்புத உணவு!
உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கு இந்த கொள்ளு மற்றும் பார்லி கலந்த கஞ்சி ஒரு சிறந்த தீர்வாகும். இது உடலில் தேங்கியுள்ள தேவையற்ற கெட்ட நீரை வெளியேற்றி, உடல் எடையை மளமளவென குறைக்க உதவுகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பருகக்கூடிய இந்தச் சத்தான கஞ்சியை ‘ஃபுட்டீ தமிழா’ இன்ஸ்டாகிராம் பக்கம் பகிர்ந்துள்ளது.
தேவையான பொருட்கள்:
| பொருட்கள் | அளவு |
| பார்லி அரிசி | 1 கப் |
| கொள்ளு | 1/4 கப் |
| நல்லெண்ணெய் | 1 டீஸ்பூன் |
| சீரகம் / மிளகு | 1/4 டீஸ்பூன் / 10 எண்ணம் |
| இஞ்சி / பூண்டு | சிறிதளவு (பொடியாக நறுக்கியது) |
| சின்ன வெங்காயம் | 6-7 (பொடியாக நறுக்கியது) |
| தக்காளி / ப்ராக்கோலி | தலா 1 / சிறிதளவு |
| வாழைத்தண்டு | சிறிதளவு (பொடியாக நறுக்கியது) |
| உப்பு / தண்ணீர் | சுவைக்கேற்ப / 1 லிட்டர் |
எளிய செய்முறை விளக்கம்:
- வறுத்தல்: ஒரு வாணலியில் கொள்ளு மற்றும் கழுவி காயவைத்த பார்லியைச் சேர்த்து நன்கு வறுத்து, பின்னர் நீரில் இரண்டு முறை கழுவி ஊறவைக்கவும்.
- தாளித்தல்: குக்கரில் நல்லெண்ணெய் ஊற்றி சீரகம், மிளகு, இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கி, பின் சின்ன வெங்காயம் மற்றும் தக்காளியைச் சேர்த்து நன்கு வதக்கவும்.
- காய்கறிகள்: இதனுடன் நறுக்கிய ப்ராக்கோலி மற்றும் வாழைத்தண்டைச் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
- வேகவைத்தல்: ஊறவைத்த கொள்ளு மற்றும் பார்லியை வடிகட்டிச் சேர்த்து, தேவையான உப்பு மற்றும் 1 லிட்டர் நீர் ஊற்றி குக்கரை மூடவும்.
- பரிமாறுதல்: 7-8 விசில் விட்டு இறக்கிய பின், கஞ்சியை நன்கு மசித்து சூடாகப் பருகினால் சுவையான கொள்ளு பார்லி கஞ்சி தயார்!


