மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் எண்ணெய் கப்பல்களை பாதுகாக்க போர்க் கப்பல்களை அனுப்பும் திட்டம் இல்லை என ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா அறிவித்துள்ளன.
சில நாட்களுக்கு முன்பு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்காவுக்கு ஆதரவாக நட்பு நாடுகள் ஹார்முஸ் நீரிணை பகுதியில் போர்க் கப்பல்களை அனுப்ப உள்ளதாக தெரிவித்திருந்தார். ஆனால் தற்போதைய நிலவரப்படி எந்த நாடும் அங்கு போர்க் கப்பல்களை அனுப்பவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.
மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படும் அபாயம் குறித்து பல நாடுகள் கவலை தெரிவித்துள்ளன. இருப்பினும் நிலைமையை கவனித்து வருகிறோம் என ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா அதிகாரிகள் கூறியுள்ளனர்.

