புதுடெல்லி:

கடந்த 2025 மே 12ஆம் தேதி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தனது ஓய்வை அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார் நட்சத்திர ஆட்டக்காரர் விராட் கோலி. அவர் ஓய்வு பெற்று ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையிலும், கோலி மீண்டும் வெள்ளை உடை அணிந்து டெஸ்ட் போட்டிகளில் களம் காண வேண்டும் என்பது அவரது கோடிக்கணக்கான ரசிகர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.

இந்நிலையில், விராட் கோலியின் டெஸ்ட் கிரிக்கெட் மறுபிரவேசம் (Comeback) குறித்த முக்கியத் தகவல் ஒன்றை அவரது முன்னாள் பயிற்சியாளர் ராஜ்குமார் சர்மா பகிர்ந்துள்ளார்.

பயிற்சியாளர் ராஜ்குமார் சர்மா பேட்டி:

சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ராஜ்குமார் சர்மாவிடம், “கோலி மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட் விளையாட வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருவது பற்றி உங்கள் கருத்து என்ன?” என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்குப் பதிலளித்த அவர்:

“ஓய்வில் இருந்து மீண்டும் வந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது குறித்து விராட் கோலியிடம் நாங்கள் தொடர்ந்து பேசிக்கொண்டுதான் இருக்கிறோம். இது தொடர்பாக அவரோடு ஆலோசனைகள் நடந்து வருகின்றன. பொறுத்திருந்து பார்ப்போம், என்ன நடக்கிறது என்று!” எனக் கூறினார்.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு:

முன்னாள் பயிற்சியாளரின் இந்த நெகிழ்வான பதில், கோலியின் தீவிர ரசிகர்களிடையே புதிய நம்பிக்கையை விதைத்துள்ளது. கோலி தனது ஓய்வு முடிவை மறுபரிசீலனை செய்து, மீண்டும் இந்திய டெஸ்ட் அணியில் இணைவாரா என்ற எதிர்பார்ப்பு கிரிக்கெட் வட்டாரத்தில் தற்போது தீயாகப் பரவி வருகிறது.

Share.
Leave A Reply

Exit mobile version