தமிழக அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதத்தை ஏற்படுத்தும் வகையில் நடிகர் மற்றும் அரசியல் தலைவர் விஜய் கருத்து தெரிவித்துள்ளார்.
அடுத்த ஜென்மத்தில் விவசாய குடும்பத்தில் பிறக்க ஆசைப்படுகிறேன் என்று அவர் கூறியுள்ளார்.
விவசாயிகளின் நிலை குறித்து பேச்சு
விவசாயம் பற்றி தனக்கு அதிக அறிவு இல்லை என்றாலும், விவசாயிகளின் கஷ்டம் தெரியும் என்று விஜய் தெரிவித்தார்.
விவசாயிகளின் வாழ்க்கை மிகவும் கடினமானது என்றும் அவர் கூறினார்.
ஸ்டாலின் மீது விமர்சனம்
நானும் டெல்டாகாரன் என கூறும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை விஜய் விமர்சித்தார்.
“நானும் டெல்டாக்காரன் என்று யார் காதிலும் டால்டா ஊற்ற வரவில்லை” என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த கருத்து தற்போது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


