சென்னை சிபிஐ அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த மறைந்த ‘தோழர்’ நல்லகண்ணுவின் உடலுக்கு தவெக தலைவர் விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
மலர்தூவி மரியாதை செலுத்திய அவர், சமூகநீதிக்காக அர்ப்பணித்த வாழ்நாளை நினைவுகூர்ந்து இரங்கல் தெரிவித்தார். நல்லகண்ணுவின் எளிமை, நேர்மை மற்றும் கொள்கை உறுதி அரசியல் தலைமுறைகளுக்கு வழிகாட்டியாக இருக்கும் என குறிப்பிட்டார்.
பின்னர் குடும்பத்தினரையும் சந்தித்து ஆறுதல் கூறிய விஜய், இந்த இழப்பு தமிழக அரசியல் மற்றும் பொதுவுடமை இயக்கத்திற்கு பேரிழப்பு என தெரிவித்தார்.


