அம்பேத்கர் பிறந்தநாளில் எழும் புதிய முழக்கம்: பட்டியல் சமூகத்தின் ‘அதிகாரப் பங்கு’ குறித்து ரவிக்குமார் கட்டுரை!

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் “ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு” என்ற விசிக-வின் முழக்கத்தால் ஏற்கனவே சூடுபிடித்துள்ள நிலையில், தற்போது ரவிக்குமார் எம்.பி அவர்கள் “அமைச்சரவையில் இட ஒதுக்கீடு” என்ற சட்டரீதியான கோரிக்கையை முன்வைத்துள்ளார். இது வெறும் அரசியல் கோரிக்கை மட்டுமல்ல, பட்டியல் சமூக மக்களின் கொள்கை முடிவு எடுக்கும் அதிகாரத்திற்கான குரல் என அவர் வலியுறுத்தியுள்ளார்.


ரவிக்குமார் எம்.பி முன்வைக்கும் முக்கிய வாதங்கள்:

  1. மக்கள் தொகைக்கும் பிரதிநிதித்துவத்திற்கும் உள்ள இடைவெளி: தமிழக சட்டமன்றத்தில் 234 இடங்களில் 46 இடங்கள் (சுமார் 20%) பட்டியல் மற்றும் பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால், அமைச்சரவையில் அவர்களுக்கு 5-ல் ஒரு பங்கு கூட வாய்ப்பு வழங்கப்படுவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
  2. அம்பேத்கரின் தொலைநோக்கு: அரசாங்கத்தின் பொதுக்கொள்கையை வகுக்கும் அதிகாரமிக்க அமைச்சரவையில் பட்டியல் சமூகத்தினர் இடம்பெறுவது அவசியம் என 1942-லேயே அம்பேத்கர் வலியுறுத்தியதை ரவிக்குமார் நினைவு கூர்ந்துள்ளார்.
  3. தகுதி Vs ஒதுக்கீடு: “தகுதியுள்ளவர்களை விட, தகுதியில்லாதவர்களே (மேலிடத்திற்கு கட்டுப்படுபவர்கள்) பெரும்பாலும் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்; இதனாலேயே அமைச்சரவையில் உரிய இடங்கள் கிடைப்பதில்லை” என்ற அம்பேத்கரின் விமர்சனத்தை முன்வைத்து, இதற்குத் தீர்வாக அமைச்சரவையிலும் இட ஒதுக்கீடு முறையைக் கொண்டு வர வேண்டும் என்கிறார்.
  4. சட்டமன்ற உறுப்பினராக மட்டும் போதாது: எம்.எல்.ஏ-வாக இருப்பது அரசாங்க நடவடிக்கையில் செல்வாக்கு செலுத்த உதவும், ஆனால் அமைச்சர் பதவி மட்டுமே அதிகாரத்தின் மையப்புள்ளி என்பதை அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

அரசியல் முக்கியத்துவம்:

  • திமுக – அதிமுக நிலைப்பாடு: ஏற்கனவே “ஆட்சியில் பங்கு” என்ற கோரிக்கையை முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அதிமுக தலைமை நிராகரித்துள்ள நிலையில், விசிக இந்த விவகாரத்தை மீண்டும் ஒரு “Major” கோரிக்கையாக மாற்றியுள்ளது.
  • தேர்தல் நேரத்தில் அழுத்தம்: தேர்தல் நெருங்கும் வேளையில், பட்டியல் சமூக வாக்குகளைத் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும் விசிக, இக்கோரிக்கையை முன்வைப்பதன் மூலம் தனது கூட்டணித் தலைமையிடம் கூடுதல் பேரம் பேசும் (Bargaining power) நிலையை உருவாக்கியுள்ளது.
Share.
Leave A Reply

Exit mobile version