ஈரான் – இஸ்ரேல் – அமெரிக்கா இடையிலான பதற்றம் உலக நிதிச் சந்தைகளில் கடும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஒரு மாதத்தில் அமெரிக்க பங்குச்சந்தையில் சுமார் ரூ.282 லட்சம் கோடி மதிப்பிழப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் முக்கிய குறியீட்டான S&P 500 சுமார் 5.83% வீழ்ச்சி கண்டுள்ளது. குறிப்பாக கடந்த வாரம் மட்டும் ஏற்பட்ட சரிவால் சந்தை மதிப்பில் ரூ.94 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

போர் சூழ்நிலை காரணமாக முதலீட்டாளர்கள் அச்சத்தில் இருந்து பங்குகளை விற்று வெளியேறியதுதான் இந்த வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இந்த நிலை தொடர்ந்தால், உலக பொருளாதாரத்திலும் தாக்கம் ஏற்படும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version