சென்னை:
தமிழ்நாட்டைச் சேர்ந்த குடிமைப்பணித் தேர்வு (Civil Services Exam) எழுதும் ஆர்வமுள்ள இளைஞர்களின் கனவை நனவாக்கும் வகையில், தமிழ்நாடு அரசு ஒரு மிக முக்கிய உன்னதத் திட்டத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் சார்பில், UPSC 2027 முதல்நிலைத் தேர்வுக்கு (UPSC Prelims) தங்களைத் தயார் செய்து வரும் தகுதியான 1,000 மாணவர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு மாதம் ரூ. 7,500 வீதம் மொத்தம் 10 மாதங்களுக்கு நிதி உதவி வழங்கும் “ஊக்கத்தொகைத் திட்டம்” அறிவிக்கப்பட்டுள்ளது.
முக்கியத் தேதிகள் மற்றும் விவரங்கள்:
- விண்ணப்பிக்கத் தொடங்கும் தேதி: 18.07.2026
- விண்ணப்பிக்கக் கடைசி தேதி: 03.08.2026
- தேர்வு நாள் மற்றும் நேரம்: 06.09.2026 (காலை 10.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை)
விண்ணப்பிக்கும் முறை:
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் தகுதியுள்ள மாணவர்கள் https://www.skilldevelopment.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதள முகவரிக்குச் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். அல்லது விளம்பரத்தில் கொடுக்கப்பட்டுள்ள QR குறியீட்டை (QR Code) ஸ்கேன் செய்தும் எளிதாகப் பதிவு செய்யலாம்.
மத்திய அரசின் உயரிய பதவிகளைத் தமிழ்நாட்டு இளைஞர்கள் அலங்கரிக்க வேண்டும் என்ற நோக்கில் செயல்படுத்தப்படும் இந்த அறிய வாய்ப்பைத் தகுதியுள்ள மாணவர்கள் தவறாமல் பயன்படுத்தி விண்ணப்பியுங்கள்!


