மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) நடத்திய குடிமைப்பணித் தேர்வில், தமிழகத்தைச் சேர்ந்த 60 மாணவர்கள் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில், சிபிஎம் (CPM) மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் அவர்கள் நெகிழ்ச்சியான வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இந்தத் தேர்ச்சியில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், வெற்றி பெற்ற 60 பேரில் 56 பேர் தமிழக அரசின் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்றவர்கள் என்பதுதான். தமிழக அரசு மாணவர்களுக்கு வழங்கிய தரமான பயிற்சி மற்றும் ஊக்கத்தொகை ஆகியவை இந்த இமாலய வெற்றிக்கு வித்திட்டுள்ளதாக அவர் பாராட்டியுள்ளார். “இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி, ஏழை எளிய மக்களுக்காகவும் சமூக மாற்றத்திற்காகவும் சிறந்த முறையில் பணியாற்ற வேண்டும்” என வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழக அரசு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் காட்டும் இத்தகைய ஆர்வம், அகில இந்திய அளவில் தமிழக மாணவர்களின் ஆதிக்கத்தை மீண்டும் நிலைநாட்டியுள்ளது. சிபிஎம் சார்பில் வெற்றி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும், அவர்களுக்கு உறுதுணையாக இருந்த பெற்றோர்களுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகளை அவர் பகிர்ந்துள்ளார்.


