வேலூரில் வரும் 23ஆம் தேதி நடிகர் விஜய் கலந்துகொள்ள உள்ள தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்திற்கான தயாரிப்புகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
கூட்டத்தில் சுமார் 5,000 பேர் அமரக்கூடிய வகையில் விரிவான மேற்கூரை அமைக்கும் பணிகள் வேகமெடுத்து வருகின்றன. பாதுகாப்பு மற்றும் வசதிகளை கருத்தில் கொண்டு மேடை அமைப்பு, இருக்கை வசதி, ஒலி ஒளி ஏற்பாடுகள் உள்ளிட்ட பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
விஜய் நேரடியாக பங்கேற்க உள்ளதால், இந்த கூட்டம் அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. மாவட்ட அளவிலான நிர்வாகிகள் மற்றும் முக்கிய பொறுப்பாளர்கள் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


