234 தொகுதிகளிலும் தவெக தாக்கம் – அமைச்சரவை பட்டியலை தயார் செய்கிறாரா விஜய்?
தமிழகம் முழுவதும் சுமார் 85% வாக்குப்பதிவு பதிவாகியுள்ள நிலையில், இந்த அதிகப்படியான வாக்குப்பதிவு யாருக்குச் சாதகமாக அமையும் என்ற விவாதம் கிளம்பியுள்ளது. குறிப்பாக, நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றி கழகம்’ பல தொகுதிகளில் வெற்றி-தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாக உருவெடுத்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விஜய் நடத்திய ரகசிய மீட்டிங் – ரிப்போர்ட்டில் இருப்பது என்ன?
சமீபத்தில் பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் முக்கிய நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த ஆலோசனையில் அவருக்குக் கிடைத்த தகவல்கள்:
- வாக்கு சதவீத உயர்வு: ஒவ்வொரு தொகுதியிலும் தவெக சராசரியாக 15,000 முதல் 20,000 வாக்குகள் வரை பெறும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இது திமுக – அதிமுக கூட்டணிகளின் வெற்றி வாய்ப்பை நேரடியாகப் பாதிக்கும்.
- பெரம்பூர் & திருப்போரூர் கவனம்: சமூக வலைதளங்களில் வைரலாகும் தகவல்களின்படி, பெரம்பூர் மற்றும் திருப்போரூர் உள்ளிட்ட தொகுதிகளில் தவெக வேட்பாளர்கள் முன்னிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
- மாற்றத்தை நாடும் மக்கள்: 85% வாக்குப்பதிவு என்பது ஆளும் கட்சிக்கு எதிரான ‘Anti-incumbency’ அலை அல்லது புதிய மாற்றத்தை விரும்பும் இளைஞர்களின் வாக்குகள் என தவெக தரப்பு நம்புகிறது.
‘2 + 1’ திட்டம் மற்றும் அமைச்சரவை பட்டியல்?
நம்பத்தகுந்த வட்டாரங்களின்படி, ஒருவேளை தொங்கு சட்டமன்றம் அமைந்தால் அல்லது ஆட்சி அமைக்க வாய்ப்பு கிடைத்தால், யாரை அமைச்சர்களாக்கலாம் என்ற உத்தேசப் பட்டியலையும் விஜய் தரப்பு தயாராக வைத்துள்ளதாகத் தெரிகிறது. ‘2 + 1’ என்ற ஃபார்முலா அடிப்படையில் மாவட்ட வாரியாகப் பிரதிநிதித்துவம் கொடுக்க அவர் திட்டமிட்டுள்ளாராம்.


