சென்னை:

டெல்லியில் மத்திய அரசின் கொள்கைகளுக்கு எதிராகத் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் எதிர்க்கட்சிகளின் கவனஈர்ப்புப் போராட்டத்திற்குத் தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) சார்பில் முழு ஆதரவு அளிக்கப்படுவதாக அக்கட்சியின் தலைவரும் நடிகருமான விஜய் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:

“மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கவும், மாநில உரிமைகளை வலியுறுத்தியும் டெல்லியில் எதிர்க்கட்சிகள் மேற்கொண்டு வரும் அறப்போராட்டம் நியாயமானது.

ஜனநாயக அமைப்புகளையும், கூட்டாட்சித் தத்துவத்தையும் அச்சுறுத்தும் நடவடிக்கைகளுக்கு எதிராக குரல் கொடுப்பது நமது கடமை. அந்த வகையில், டெல்லியில் நடைபெறும் எதிர்க்கட்சிகளின் போராட்டத்திற்குத் தமிழக வெற்றி கழகம் தனது முழுமையான ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் கட்சியைத் தொடங்கிய பின், தேசிய அளவிலான விவகாரங்களில் தவெக தலைவர் விஜய் வெளிப்படையாகத் தனது ஆதரவை அறிவித்துள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version