| மேஷம் | செயல்திறன் அதிகரிக்கும் நாள். லட்சிய குணம் கொண்ட புதிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். பயணங்களால் நன்மை உண்டு. | மஞ்சள் / 1 |
| ரிஷபம் | உத்தியோகத்தில் உங்கள் திறமை வெளிப்படும். மேலதிகாரிகளுடன் சிறு கருத்து வேறுபாடுகள் வரலாம், எனவே பேச்சில் நிதானம் தேவை. | வெள்ளை / 6 |
| மிதுனம் | நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்குச் சக ஊழியர்களிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. | பிங்க் / 5 |
| கடகம் | பௌர்ணமி நெருங்குவதால் உணர்ச்சிகள் மேலோங்கும். பொறுமையுடன் பணிகளைத் திட்டமிட்டுச் செய்வது வெற்றியைத் தரும். | வெள்ளை / 2 |
| சிம்மம் | வியாபாரத்தில் புத்தி சாதுர்யத்தைப் பயன்படுத்தி லாபம் ஈட்டுவீர்கள். குடும்பத்தினருடன் அனுசரித்துச் செல்வது அமைதி தரும். | ஆரஞ்சு / 1 |
| கன்னி | சர்ச்சைக்குரிய விஷயங்களைத் தவிர்ப்பது நல்லது. அரசியல் அல்லது மதம் சார்ந்த விவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். | பச்சை / 5 |
| துலாம் | பிரச்சனைகளைப் பேசித் தீர்ப்பீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். வாழ்க்கைத்துணையின் உடல்நலத்தில் கவனம் தேவை. | வெளிர் பச்சை / 6 |
| விருச்சிகம் | அரசு தொடர்பான காரியங்கள் சாதகமாக முடியும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த பிரச்சனைகள் குறையும். | மஞ்சள் / 9 |
| தனுசு | வாகனங்கள் மூலம் லாபம் கிடைக்கும். உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் பேசும்போது கவனமாக இருப்பது நல்லது. | பச்சை / 3 |
| மகரம் | மற்றவர்களின் பிரச்சனைகளில் வாதாடி வெற்றி பெறுவீர்கள். பல வழிகளிலும் இன்று உங்களுக்குப் புகழ் கூடும். | நீலம் / 8 |
| கும்பம் | அதிகாரவர்க்கத்தினருடன் பேசும்போது இராஜதந்திரத்துடன் செயல்படவும். வீண் விவாதங்களைத் தவிர்ப்பது நிம்மதி தரும். | கறுப்பு / 4 |
| மீனம் | இன்று சந்திராஷ்டமம் என்பதால் பணப் பரிமாற்றங்களில் கூடுதல் கவனம் தேவை. வெளியூர் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. | சிவப்பு / 7 |