கும்பகோணம்: தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துத் கழகம் (கும்பகோணம் கோட்டம், கும்பகோணம் மண்டலம் சார்பில்) ஒரே நாளில் 14 ஸ்ரீ வைணவ திவ்யதேசத் திருக்கோயில்களுக்குச் சென்று தரிசனம் செய்து திரும்பும் வகையில் சிறப்பு ஒரு நாள் ஆன்மீகச் சுற்றுலா பேருந்து சேவைகளை இயக்கி வருகிறது.

சுற்றுலாப் பேருந்து முக்கிய விவரங்கள்:

  • இயக்கப்படும் நாட்கள்: சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை மட்டும்.
  • புறப்படும் இடம் & சேரும் இடம்: கும்பகோணம் மத்திய பேருந்து நிலையம்.
  • பயண நேரம்:
    • புறப்படும் நேரம்: காலை 5.00 மணி
    • வந்து சேரும் நேரம்: இரவு 8.00 மணி
  • கட்டணம்: ₹1,350/- (ஒரு நபருக்கு)

தரிசனம் செய்யப்படும் 14 திவ்யதேசத் திருக்கோயில்கள்:

  1. ஸ்ரீ தாடாளன்பெருமாள் கோவில் – காழிச்சீராம விண்ணகரம், சீர்காழி
  2. ஸ்ரீ அண்ணன் பெருமாள் கோவில் – அண்ணன் கோவில்
  3. ஸ்ரீ கல்யாண ரெங்கநாத பெருமாள் கோவில் – திருநகரி
  4. ஸ்ரீ வரதராஜபெருமாள் கோவில் – திருமணிக்குடம்
  5. ஸ்ரீ வைகுந்தநாதர் கோவில் – திருநாங்கூர்
  6. ஸ்ரீ வான் புருஷோத்தமன் பெருமாள் கோவில் – திருநாங்கூர்
  7. ஸ்ரீ செம்பொன்செய் பெருமாள் கோவில் – திருநாங்கூர்
  8. ஸ்ரீ பள்ளிகொண்ட பெருமாள் கோவில் – திருநாங்கூர்
  9. ஸ்ரீ குடமாடு கூத்தர் கோவில் – அரிமேய விண்ணகரம், திருநாங்கூர்
  10. ஸ்ரீ நாராயண பெருமாள் கோவில் – மணிமாடக்கோவில், திருநாங்கூர்
  11. ஸ்ரீ பரிமள ரெங்கநாத கோவில் – திருஇந்தளூர், மயிலாடுதுறை
  12. ஸ்ரீ ஸ்ரீநிவாசா பெருமாள் கோவில் – சேங்கனூர்
  13. ஸ்ரீ ஸ்ரீநிவாசா பெருமாள் கோவில் – நாச்சியார் கோவில்
  14. ஸ்ரீ சாரங்கபாணி கோவில் – கும்பகோணம்

முன்பதிவு செய்ய:

பக்தர்கள் இச்சேவையைப் பயன்படுத்திக் கொள்ளக் கீழ்க்கண்ட வழிகளில் முன்பதிவு செய்யலாம்:

  • இணையதளம்: www.tnstc.in
  • செயலி: TNSTC Mobile App
  • நேரடிப் பதிவு: கும்பகோணம் மத்திய பேருந்து நிலையம்

Share.
Leave A Reply

Exit mobile version