திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், இராணிப்பேட்டை பெண் தொழிலதிபர்களுக்கான மாபெரும் தொழில் வளர்ச்சிப் முகாம்!

தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பாக இயங்கும் தமிழ்நாடு ஊரக தொழில் காப்பு மற்றும் புத்தொழில் உருவாக்க மையம் (TN-RISE) சார்பில், பெண் தொழில்முனைவோரின் தொழில் வளர்ச்சிக்கு வலுசேர்க்கும் சிறப்பு பயிற்சி முகாம் (Bootcamp 2026) நடைபெறவுள்ளது.

📌 நிகழ்ச்சி விவரங்கள் (Event Details):

  • 📅 நாள்: 25 ஆகஸ்ட் 2026
  • நேரம்: காலை 9:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை
  • 📍 இடம்: மக்கள் குறை தீர்வு நாள் கூட்ட அரங்கம் (New GDP Hall), மாவட்ட ஆட்சியர் அலுவலகம், திருவண்ணாமலை.
  • 🎯 பயனாளிகள்: திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர் மற்றும் இராணிப்பேட்டை மாவட்டங்களைச் சேர்ந்த பெண் தொழில்முனைவோர்கள்.

💡 பயிற்சியில் வழங்கப்படும் வாய்ப்புகள் & வழிகாட்டுதல்கள்:

  • 👥 தொழில் துறை நிபுணர்களின் வழிகாட்டுதல்: அனுபவமிக்க வல்லுநர்களின் நேரடி வழிகாட்டுதல்கள்.
  • 🤝 தொழில் தொடர்புகள்: பிற தொழில்முனைவோருடன் வர்த்தக தொடர்புகளை உருவாக்கும் வாய்ப்பு (Networking).
  • 📦 தயாரிப்பு மேம்பாடு: தயாரிப்புகளின் தரத்தை உயர்த்த தேவையான ஆதரவு.
  • 💰 நிதியுதவி & வளர்ச்சி: நிதி உதவிகள் மற்றும் தொழில் விரிவாக்கத்திற்கான வாய்ப்புகள்.
  • 📢 சந்தை விரிவாக்கம்: பிராண்டிங் (வணிக அடையாளம்) மற்றும் சந்தை வாய்ப்புகளை அதிகரிக்கும் ஆதரவு.
  • ⚖️ வணிக முறைப்படுத்துதல்: சட்ட ரீதியான மற்றும் வணிக முறைப்படுத்துதலுக்கான நிபுணர் ஆலோசனைகள்.

Share.
Leave A Reply

Exit mobile version