சென்னை: சென்னை சேத்துப்பட்டு பகுதியில் செயல்பட்டு வரும் உயிரி எரிவாயு (Biogas) உற்பத்தி ஆலையில் தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, ஆலையின் செயல்பாடுகள், கழிவுகளில் இருந்து உயிரி எரிவாயு தயாரிக்கப்படும் தொழில்நுட்பம் மற்றும் தினசரி உற்பத்தித்திறன் குறித்து அதிகாரிகளிடம் விரிவாகக் கேட்டறிந்தார். மேலும், நகரத்தின் கழிவு மேலாண்மையைச் சீரமைக்கவும், பசுமை ஆற்றல் உற்பத்தியை அதிகரிக்கவும் இதுபோன்ற ஆலைகளின் எண்ணிக்கையை உயர்த்துவது குறித்து ஆலோசனைகளை வழங்கினார்.
இந்த ஆய்வின்போது அரசு உயர் அலுவலர்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.


