புதுடெல்லி:
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் டெல்லிக்கு அவசரப் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், இன்று புதுடெல்லியில் பாஜக தேசிய தலைவர்களில் ஒருவரான நிதின் நபினை நேரில் சந்தித்துப் பேசினார்.
தமிழகத்தில் அண்மையில் புதிய அரசு பொறுப்பேற்றுள்ள சூழலில், மாநிலத்தின் தற்போதைய அரசியல் நிலவரம் மற்றும் பாஜாக-வின் அடுத்தகட்ட செயல்பாடுகள் குறித்து இந்தச் சந்திப்பில் விரிவாக ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
கட்சி வளர்ச்சி குறித்து ஆலோசனை:
இந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது, தமிழகத்தில் கட்சியின் உட்கட்டமைப்பை பலப்படுத்துவது, நாடாளுமன்ற மாநிலங்களவை (Rajya Sabha) தேர்தல் வியூகங்கள் மற்றும் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்து பாஜாக தேசிய தலைவர் நிதின் நபினுடன் நயினார் நாகேந்திரன் விவாதித்ததாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழக பாஜக-வின் கள நிலவரம் குறித்த முக்கிய அறிக்கை ஒன்றும் இந்தச் சந்திப்பின் போது சமர்ப்பிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
பாஜக தேசியத் தலைவரைத் தமிழக பாஜக தலைவர் நேரில் சந்தித்துப் பேசியிருப்பது, தமிழக அரசியல் களத்தில் மட்டுமன்றி கட்சிக்குள்ளும் பெரும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.


