திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளர் இளமதி சுப்பிரமணியன், வாக்கு சேகரிப்பு பிரச்சாரத்தின் போது திடீரென மயக்கமடைந்தார்.
இதையடுத்து, அவர் ஆடுதுறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
அமைச்சர் நேரில் சந்திப்பு
இந்த தகவலை அறிந்த அமைச்சர் கோவி செழியன், தன்னுடைய பிரச்சாரத்தை ஒத்திவைத்து நேரில் மருத்துவமனைக்கு சென்று வேட்பாளரின் உடல்நிலையை விசாரித்தார்.
இந்த சம்பவம், அப்பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தின் போது சிறிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

