விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் பிரிவு மாணவ, மாணவிகள் நாட்டின் முன்னணி மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் உயர் கல்வி பயில ஆண்டிற்கு ரூ. 2 லட்சம் வரை கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்திற்கான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
திட்டத்தின் பயன்கள்:
- கற்பிப்புக் கட்டணம், சிறப்பு கட்டணம், தேர்வு கட்டணம் மற்றும் இதர கட்டாயக் கட்டணங்கள் வழங்கப்படும்.
- ஆண்டிற்கு அதிகபட்சமாக ₹2.00 இலட்சம் வரை கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.
விண்ணப்பிப்பதற்கான தகுதிகள்:
- IIT, IIM, IIIT, NIT மற்றும் மத்தியப் பல்கலைக்கழகங்களில் இளங்கலை (UG) மற்றும் முதுகலை (PG) பயிலும் தமிழக மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- மாணவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 2.50 இலட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
- மத்திய அல்லது மாநில அரசின் இதர உதவித்தொகை பெறுபவர்கள் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க இயலாது.
முக்கிய தேதிகள் & விண்ணப்பிக்கும் முறை:
- புதுப்பித்தல் விண்ணப்பங்கள் (Renewal): 31.10.2026
- புதிய விண்ணப்பங்கள் (Fresh): 30.11.2026
- படிவம் பெறும் இடம்: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ‘பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம்’.
- அதிகாரப்பூர்வ இணையதளம்: www.bcw.tn.gov.in
தகுதியுள்ள மாணவ, மாணவிகள் இச்சலுகையைப் பயன்படுத்தி நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


