ஆலங்குளம் அருகே சம்பவம் பரபரப்பு
போராட்டம் தீவிரம்; அதிகாரிகள் நடவடிக்கை
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே மருதம்புத்தூர் பகுதியில் விவசாயி மீது காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எப்படி நடந்தது?
மருதம்புத்தூரை சேர்ந்த மணிகண்டன் (32) என்பவர் பனை ஏறும் தொழிலில் ஈடுபட்டு வந்தார். கள் விற்பனை தொடர்பான தகவலின் அடிப்படையில், ஆலங்குளம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் இசக்கிராஜா மற்றும் காவலர்கள் ரோந்து சென்றபோது, விசாரணைக்காக மணிகண்டன் மற்றும் அவரது தந்தையை அழைத்துச் சென்றுள்ளனர்.
அப்போது ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறிய நிலையில், உதவி ஆய்வாளர் இசக்கிராஜா துப்பாக்கி சூடு நடத்தியதாக கூறப்படுகிறது. இதில் மணிகண்டனின் காலில் இரண்டு குண்டுகள் பட்டு அவர் படுகாயமடைந்தார்.
மருத்துவ சிகிச்சை
காயமடைந்த மணிகண்டன் மற்றும் காயமடைந்த போலீஸ் அதிகாரி இருவரும் தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
போராட்டம் தீவிரம்
சம்பவம் குறித்து தகவல் அறிந்த உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் நூற்றுக்கணக்கானோர் சாலையில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். பல அரசியல் கட்சி நிர்வாகிகளும் ஆதரவாக கலந்து கொண்டனர்.
வழக்கு பதிவு
பொதுமக்களின் போராட்டத்திற்குப் பிறகு, உதவி ஆய்வாளர் இசக்கிராஜா மற்றும் காவலர்கள் மணிராஜ், கார்த்திக் ஆகியோருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது

