தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் விதி 110-ன் கீழ் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் வெளியிடப்பட்ட அறிவிப்பிற்கிணங்க, மாநிலம் முழுவதும் ஓட்டுநர் உரிமம் (DL) மற்றும் வாகனப் பதிவுச் சான்றிதழ் (RC) ஆகியவற்றை அச்சிடப்பட்ட அட்டைகளுக்குப் பதிலாக டிஜிட்டல் முறையில் வழங்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டம் 15.09.2026 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
பொதுமக்களுக்கு வெளிப்படையான, ஊழலற்ற மற்றும் விரைவான சேவைகளை வழங்கும் நோக்கில் போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணையரகம் இத்திட்டத்தைச் செயல்படுத்தியுள்ளது.
📌 டிஜிட்டல் DL & RC பெறுவதற்கான வழிமுறைகள் & முக்கிய தகவல்கள்:
- 💻 இணையதளங்கள் & செயலிகள்: டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் (DL) மற்றும் வாகனப் பதிவுச் சான்றிதழை (RC) முறையே SARATHI மற்றும் VAHAN இணையதளங்கள் மூலமாகவும், DigiLocker மற்றும் mParivahan கைப்பேசிச் செயலிகள் மூலமாகவும் எளிதாகப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
- 🏬 உதவி மையங்கள் (Help Desks): டிஜிட்டல் முறையைப் பொதுமக்கள் எளிதில் பயன்படுத்த ஏதுவாக, மாநிலம் முழுவதிலும் உள்ள அனைத்துப் போக்குவரத்துத் துறை அலுவலகங்களிலும் சிறப்பு உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
- 🛠️ உதவி மையங்கள் வழங்கும் சேவைகள்:
- சாரதி மற்றும் வாகன இணையதளங்கள் மூலம் டிஜிட்டல் DL மற்றும் RC பதிவிறக்கம் செய்தல்.
- DL மற்றும் RC ஆகியவற்றுடன் மொபைல் எண்ணை இணத்தல்/புதுப்பித்தல்.
- DL விண்ணப்ப எண்ணைக் கண்டறிதல் மற்றும் DigiLocker/mParivahan செயலிகளைப் பயன்படுத்த வழிகாட்டுதல்.
- 📄 கலர் பிரிண்ட் நகல் தேவையா?: அச்சிடப்பட்ட வண்ணப் பிரதி (Printed Colour Copy) தேவைப்படும் பொதுமக்கள், ஏதேனும் ஒரு இ-சேவை மையத்தை (e-Sevai Centre) அணுகி, பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு வரும் குறுஞ்செய்தியை காண்பித்து, ஆவணம் ஒன்றுக்கு ₹60/- கட்டணம் செலுத்தி நகலைப் பெற்றுக் கொள்ளலாம்.
- 🎥 வழிகாட்டி வீடியோக்கள்: பொதுமக்கள் பயன்பாட்டிற்காகத் தெளிவான வழிகாட்டி வீடியோக்கள் போக்குவரத்துத் துறையின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் (@tnstaofficial) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
✨ வெளிப்படையான மற்றும் எளிய டிஜிட்டல் நிர்வாகத்தை நோக்கித் தமிழ்நாடு போக்குவரத்துத் துறை எடுத்து வைத்துள்ள மற்றுமொரு முற்போக்கான நடைமுறை! 🚗🛵


