நுகர்வோர் உரிமைகளை டிஜிட்டல் முறையில் மக்களிடம் சேர்க்கத் தமிழ்நாடு அரசின் அசத்தல் நடவடிக்கை!

தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை 2026-2027: கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை மானியக் கோரிக்கை அறிவிப்பு!

தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2026-2027-ன் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை மானியக் கோரிக்கையின் கீழ், நுகர்வோர் உரிமைகள் குறித்த விழிப்புணர்வை நவீன முறையில் மக்களிடம் கொண்டு சேர்க்க சமூக ஊடகங்கள் வாயிலாக விழிப்புணர்வுப் பிரசாரம் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

📌 செய்தியின் முக்கிய அம்சங்கள் (Key Highlights):

  • 💰 நிதி ஒதுக்கீடு:சமூக ஊடகங்கள் வாயிலாக விழிப்புணர்வுப் பிரசாரங்களை மேற்கொள்ள ரூபாய் 25 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • 🎯 இலக்குக் குழுக்கள் (Target Audience):
    • 👩 பெண்கள்
    • 👦 Gen Z – இளைஞர்கள்
    • 🎓 மாணாக்கர்கள்
  • 📲 செயல்படுத்தப்படும் தளங்கள்:இன்ஸ்டாகிராம், பேஸ்புக், யூடியூப், எக்ஸ் (ட்விட்டர்) மற்றும் வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடகத் தளங்கள் மூலம் நுகர்வோர் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு உள்ளடக்கங்கள் பகிரப்படும்.
  • 💡 நோக்கம்:இன்றைய டிஜிட்டல் காலத்தில் இளைஞர்கள் மற்றும் நுகர்வோர்கள் போலிப் விளம்பரங்கள், ஏமாற்றங்கள் மற்றும் வியாபார முறைகேடுகளிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும், தங்களின் சட்டப்பூர்வ உரிமைகளை அறிந்து கொள்ளவும் உறுதுணையாக இருப்பது.
Share.
Leave A Reply

Exit mobile version