ஸ்டாக்ஹோம்:

இன்றைய டிஜிட்டல் உலகத்தில் குழந்தைகள் கையில் ஸ்மார்ட்போன் கொடுப்பது சாதாரணமாகிவிட்ட நிலையில், 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஸ்மார்ட்போன் கொடுப்பதைத் தவிர்க்குமாறு சுவீடன் நாட்டின் பொதுச் சுகாதார அமைச்சகம் (Public Health Agency) பெற்றோர்களுக்கு அதிரடி அறிவுரை வழங்கியுள்ளது. இது உலக அளவில் மருத்துவ நிபுணர்கள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

சுவீடன் அரசு மற்றும் மருத்துவர்கள் கூறும் காரணங்கள்:

  • மனநல பாதிப்புகள்: 13 வயதுக்கு முன்பாகவே ஸ்மார்ட்போன் பயன்படுத்தத் தொடங்கும் குழந்தைகளுக்குத் தற்கொலை எண்ணங்கள், மன உளைச்சல், உணர்ச்சிவசப்படுதல் மற்றும் சுயமதிப்பு குறைதல் போன்ற கடுமையான மனநலப் பிரச்சினைகள் ஏற்படுவதாக சர்வதேச ஆய்வுகள் எச்சரிக்கின்றன.
  • தூக்கமின்மை மற்றும் கவனச்சிதறல்: இரவு நேரங்களில் நீண்ட நேரம் போன் பார்ப்பதால் குழந்தைகளின் தூக்கம் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. இது அவர்களின் ஞாபக சக்தி, கவனிக்கும் திறன் மற்றும் அன்றாட ஒழுக்கத்தைக் குலைக்கிறது.
  • அடிமையாதல் மற்றும் ஆபத்தான உள்ளடக்கம்: குழந்தைகள் மிக எளிதாகப் போன் பயன்பாட்டிற்கு அடிமையாகி விடுகிறார்கள். மேலும், இணையத்தில் இருக்கும் தேவையில்லாத, ஆபத்தான விஷயங்களை அவர்கள் பார்ப்பதற்கும், தவறான நபர்களின் தொடர்புகள் ஏற்படுவதற்கும் இது வழிவகுக்கிறது.
  • மாற்று வழி என்ன?: அவசரத் தேவைகளுக்காகக் குழந்தைகளுக்குப் போன் தர நினைக்கும் பெற்றோர்கள், இணைய வசதி (Internet) இல்லாத, வெறும் அழைப்புகள் மற்றும் மெசேஜ் மட்டும் அனுப்பக்கூடிய சாதாரண கீபேட் போன்களை (Basic Devices) வாங்கித் தரலாம் என்று அரசு பரிந்துரைத்துள்ளது.

மக்களே… சின்னக் குழந்தைகளுக்கு ஸ்மார்ட்போன் கொடுப்பது பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க? 👇

குழந்தைகளின் எதிர்காலத்தையும், மன ஆரோக்கியத்தையும் காக்க சுவீடன் அரசு எடுத்துள்ள இந்த முடிவு உலக நாடுகளுக்கு ஒரு முக்கிய வழிகாட்டியாகப் பார்க்கப்படுகிறது.

மக்களே நீங்க என்ன நினைக்கிறீங்க? உங்க வீட்ல இருக்குற 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஸ்மார்ட்போன் கொடுக்குறதை நீங்க ஆதரிக்கிறீங்களா? சுவீடன் அரசு சொல்வது போல நாமும் குழந்தைகளுக்குப் போன் தருவதைக் கட்டுப்படுத்த வேண்டுமா? உங்களுடைய கருத்துக்களை கீழே கமெண்ட் பண்ணுங்க! அப்படியே சின்னக் குழந்தைகள் உங்க நண்பர்கள் மற்றும் பெற்றோருக்கு இந்தத் தகவலை உடனே ஷேர் பண்ணுங்க!

Share.
Leave A Reply

Exit mobile version