புதுடெல்லி: இன்சூரன்ஸ் பாலிசிகளில் தெளிவற்ற மற்றும் குழப்பமான வார்த்தைகளைப் பயன்படுத்தி, இழப்பீடு வழங்கும் பொறுப்பில் இருந்து காப்பீட்டு நிறுவனங்கள் தப்பிக்க முயல்வதாக உச்சநீதிமன்றம் கடும் விமர்சனம் செய்துள்ளது.
வழக்கு ஒன்றின் விசாரணையின் போது நீதிபதிகள் தெரிவிக்கையில், “பாலிசியில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகள் தெளிவாக இல்லையெனில், அதன் சந்தேகத்தின் பலன் மற்றும் பலன்கள் முழுமையாக வாடிக்கையாளருக்கே கிடைக்க வேண்டும்” என்று அதிரடி உத்தரவைப் பிறப்பித்தனர்.
மேலும், காப்பீட்டு ஒப்பந்தங்களில் பொதுமக்கள் எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய வகையிலான ஒரே மாதிரியான, தெளிவான விதிமுறைகளைக் கொண்டுவர இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் வளர்ச்சி முகமை (IRDAI) உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.


