சென்னை தலைமைச் செயலகத்தில் ஒரு முக்கிய நிகழ்வாக, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களை, Stan Ventures குழுமத்தின் தலைமைச் செயல் அலுவலர் மற்றும் நிர்வாக இயக்குநர் திரு. ஆர். பிரதீப் குமார் அவர்கள் நேரில் சந்தித்துப் பேசினார்.
இந்தச் சந்திப்பின் போது, மாநிலத்தின் பல்வேறு சமூக நலத் திட்டங்கள் மற்றும் அவசரகாலப் பொது நிவாரணப் பணிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில், முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 2 கோடி ரூபாய்க்கான வங்கி வரைவோலையை (Demand Draft) அவர் முறைப்படி முதலமைச்சரிடம் வழங்கினார்.
அரசின் மக்கள் நலப் பணிகளுக்குத் தோள் கொடுக்கும் வகையில் கார்ப்பரேட் நிறுவனங்கள் முன்வந்து வழங்கும் இதுபோன்ற பெரும் பங்களிப்புகள், மாநிலத்தின் உள்கட்டமைப்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேலும் துரிதப்படுத்த பெரிதும் உதவியாக இருக்கும் மக்களே!


