குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடு விதிக்கும் முயற்சியில் இந்தியா இணைவதற்கு பிரான்ஸ் அதிபர் எமானுவல் மேக்ரான் அழைப்பு விடுத்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற AI உச்சி மாநாட்டில் பேசிய அவர், “குழந்தைகளை பாதுகாப்பது ஒழுங்குமுறை நடவடிக்கை மட்டுமல்ல, அது நாகரிகத்தின் அடையாளம்” என வலியுறுத்தினார்.

சிறுவர் பாதுகாப்பு, இணையப் பயன்பாட்டில் கட்டுப்பாடு, செயற்கை நுண்ணறிவு சூழலில் குழந்தைகளின் நலன் போன்ற விஷயங்கள் குறித்து உலக நாடுகள் இணைந்து செயல்பட வேண்டிய அவசியத்தை அவர் குறிப்பிட்டார்.

டிஜிட்டல் உலகம் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், குழந்தைகளின் பாதுகாப்பு தொடர்பான இந்த அழைப்பு சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெறும் விவகாரமாக பார்க்கப்படுகிறது.












Share.
Leave A Reply

Exit mobile version