புதுடெல்லி:
இந்திய இளைஞர்களை எதிர்காலச் சவால்களுக்குத் தயார்படுத்தவும், தொழில்துறையின் உடனடித் தேவைகளுக்கு ஏற்ப அவர்களின் திறன்களை உயர்த்தவும் ஸ்கில் இந்தியா மிஷன் (Skill India Mission – SIM) தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.
மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம் (MSDE) எடுத்துள்ள முக்கிய நடவடிக்கைகள் வருமாறு:
முக்கிய அம்சங்கள்:
- பிரதான் மந்திரி கௌஷல் விகாஸ் யோஜனா 4.0 (PMKVY 4.0): வளர்ந்து வரும் புதிய துறைகளில் தேவை சார்ந்த (Demand-driven) திறன் பயிற்சிகள், திறனுயர்த்துதல் (Upskilling) மற்றும் மறுதிறன் வழிகாட்டல்கள் (Reskilling) வழங்கப்படுகின்றன.
- 36 துறைசார் திறன் கவுன்சில்கள் (SSCs): நாட்டின் முக்கியத் தொழிற்துறைத் தலைவர்களைக் கொண்டு 36 துறைசார் திறன் கவுன்சில்கள் அமைக்கப்பட்டு, பயிற்சிகள் தொழிற்துறைக்கேற்றவாறு வடிவமைப்பு செய்யப்படுகின்றன.
- ஸ்கில் இந்தியா டிஜிட்டல் ஹப் (#SIDH): திறன் பயிற்சி, கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் தொழில்முனைவு ஆகிய அனைத்தையும் ஒரே இடத்தில் ஒருங்கிணைக்கும் ஒரே தளமாக ‘Skill India Digital Hub’ தொடங்கப்பட்டுச் செயல்பட்டு வருகிறது.
இந்திய இளைஞர்களின் ஆற்றலைச் சரியான வழியில் பயன்படுத்தி, அவர்களை உலகளாவிய வேலைவாய்ப்புகளுக்குத் தகுதியானவர்களாக மாற்றுவதில் இத்திட்டம் பெரும் பங்கு வகிக்கிறது!


