முழு ஆண்டு தேர்வு அட்டவணை வெளியீடு – ஏப்ரல் 17 முதல் கோடை விடுமுறை

தமிழக பள்ளிக் கல்வி இயக்ககம், 1 முதல் 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முழு ஆண்டு தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளது.

அதன்படி, 6 முதல் 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 1 முதல் 16 வரை தேர்வுகள் நடைபெறும். 1 முதல் 5-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 6 முதல் 16 வரை முழு ஆண்டு தேர்வு நடைபெற உள்ளது.

ஏப்ரல் 16ஆம் தேதியுடன் தேர்வுகள் நிறைவடையவுள்ளதால், மாணவர்களுக்கு ஏப்ரல் 17 முதல் கோடை விடுமுறை தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் தேர்வுகளுக்கான தயாரிப்பை முன்னதாகவே மேற்கொள்ள பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version