பத்திரிக்கையாளர் Savukku Shankar அவர்களின் தாயார் திருமதி கமலா அம்மாள் அவர்கள் மறைந்தார் என்ற செய்தி பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த துயரச் செய்தியை அறிந்த அகில இந்திய ஜனநாயக மக்கள் நல பேரவையின் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் Dr. Henry அவர்கள், தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
தாயை இழப்பது எவருக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும் என்றும், குறிப்பாக இறுதி நேரத்தில் அருகில் இருக்க முடியாத நிலை மிகுந்த வேதனையளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மறைந்த கமலா அம்மாள் அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்பதாகவும், துயரத்தில் இருக்கும் சவுக்கு சங்கர் அவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளார்.
இந்த கடினமான நேரத்தில் குடும்பத்தினருக்கு மனவலிமை கிடைக்க இறைவனை வேண்டுகிறோம்.



