பிரபல நடிகை சமந்தா, சமூக வலைதளங்களில் அவ்வப்போது தனது ரசிகர்களுடன் உரையாடுவதையும், அவர்களின் கேள்விகளுக்குப் பதிலளிப்பதையும் வழக்கமாகக் கொண்டுள்ளார். அந்த வகையில், சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் ‘கேள்வி-பதில்’ (Q&A) நிகழ்வில் ஈடுபட்டார்.
அப்போது ரசிகர் ஒருவர், “உங்களை வெறுப்பவர்களை (Haters) ஒரே வார்த்தையில் எப்படி விவரிப்பீர்கள்?” என்று கேள்வி எழுப்பினார்.
இந்தக் கேள்விக்குத் துளியும் தயங்காமல், நகைச்சுவையான தொனியில் பதிலளித்த சமந்தா, “ஹேட்டர்ஸ்-ஆ? யாருடைய ஹேட்டர்ஸ்? எனக்கெல்லாம் ஹேட்டர்ஸ் இருக்காங்களா என்ன?” எனத் திருப்பிக் கேட்டுள்ளார்.
சமந்தாவின் இந்த எதார்த்தமான மற்றும் அலட்டிக்கொள்ளாத பதில், சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. இக்கட்டான சூழல்களிலும், விமர்சனங்களையும் நகைச்சுவையாகக் கடந்து செல்லும் அவரது மனப்பக்குவத்தை ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.


