இந்தியாவின் மிகப்பெரிய தனியார் நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (Reliance Industries), அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் சுமார் $300 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ₹25 லட்சம் கோடி) முதலீட்டில் பிரம்மாண்டமான புதிய எண்ணெய் சுத்திகரிப்பு மையத்தை அமைக்கவுள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.

50 ஆண்டு கால சாதனை: அமெரிக்காவில் கடந்த 50 ஆண்டுகளில் ஒரு புதிய எண்ணெய் சுத்திகரிப்பு மையம் (Oil Refinery) அமைக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். இதனை அமெரிக்காவிற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக வர்ணித்துள்ள அதிபர் ட்ரம்ப், “ரிலையன்ஸ் நிறுவனத்தின் இந்த முதலீடு அமெரிக்காவின் எரிசக்தி தேவையில்லை தன்னிறைவு அடையச் செய்யும். இது ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதோடு, அமெரிக்க வரலாற்றிலேயே ஒரு மைல்கல்லாக அமையும்” எனப் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

முதலீட்டின் முக்கியத்துவம்: குஜராத்தின் ஜாம்நகரில் உலகின் மிகப்பெரிய சுத்திகரிப்பு மையத்தை வெற்றிகரமாக நடத்தி வரும் முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் குழுமம், இப்போது அமெரிக்க மண்ணில் காலடி எடுத்து வைப்பது சர்வதேச கவனத்தைப் பெற்றுள்ளது. டெக்சாஸ் மாகாணத்தின் இயற்கை எரிவாயு மற்றும் கச்சா எண்ணெய் வளங்களைப் பயன்படுத்தி, உலகத்தரத்திலான எரிபொருட்களை உற்பத்தி செய்ய இந்த மையம் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் அமெரிக்காவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை கணிசமாகக் குறைக்க முடியும் என வெள்ளை மாளிகை வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.

Share.
Leave A Reply

Exit mobile version