வேலைவாய்ப்பு உலகில் பெரும் மாற்றத்தை சுட்டிக்காட்டும் வகையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. வாய்ப்பு கிடைத்தால் ஊழியர்களை குறைத்து, முழுமையாக செயற்கை நுண்ணறிவு (AI) பயன்பாட்டுக்கு மாற 10-ல் 9 நிறுவனங்கள் தயாராக உள்ளன என்று சமீப ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
செலவு குறைப்பு, வேகமான செயல்திறன், 24/7 பணிச்சூழல் போன்ற காரணங்களால் நிறுவனங்கள் AI-க்கு முன்னுரிமை அளித்து வருகின்றன. குறிப்பாக தரவு பகுப்பாய்வு, வாடிக்கையாளர் சேவை, உள்ளடக்க உருவாக்கம் போன்ற துறைகளில் மனிதர்களுக்கு பதிலாக AI பயன்படுத்தும் முயற்சிகள் அதிகரித்துள்ளன.
இதனால் எதிர்காலத்தில் வேலை வாய்ப்புகளில் மாற்றங்கள் உருவாகும் என்பதோடு, புதிய திறன்கள் மற்றும் தொழில்நுட்ப அறிவு முக்கியத்துவம் பெறும் நிலை உருவாகியுள்ளது. அதே நேரத்தில், மனித வேலைவாய்ப்புகள் குறையக்கூடும் என்ற அச்சமும் எழுந்துள்ளது.

