பாலிவுட் சூப்பர் ஸ்டார் ரன்வீர் சிங் மற்றும் தமிழ் திரையுலகின் சாக்லேட் பாய் மாதவன் முதன்முறையாக இணைந்து நடித்துள்ள ‘துரந்தர் தி ரெவெஞ்’ (Dhurandhar The Revenge) திரைப்படத்தின் மிரட்டலான ட்ரெய்லர் இன்று வெளியாகி இணையத்தை அதிரவைத்து வருகிறது. ஒரு பக்கா ரிவெஞ்ச் ஆக்ஷன் த்ரில்லராக உருவாகியுள்ள இப்படத்தில், ‘தெய்வத்திருமகள்’ புகழ் சாரா அர்ஜுன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

வெளியாகியுள்ள ட்ரெய்லரில் ரன்வீர் சிங்கின் அதிரடி ஆக்ஷன் காட்சிகளும், மாதவனின் மிரட்டலான நடிப்பும் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளன. நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஒரு பிரம்மாண்டமான ஆக்ஷன் படத்தில் இவர்கள் இணைந்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. இப்படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் பான்-இந்தியா (Pan-India) படமாக வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது.

அனைத்து மொழிகளிலும் வரும் மார்ச் 19-ம் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியாக உள்ளது. கோடை விடுமுறைத் தொடக்கத்தில் வெளியாகும் இந்த ஆக்ஷன் விருந்து, பாக்ஸ் ஆபீஸில் புதிய சாதனைகளை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share.
Leave A Reply

Exit mobile version